Tuesday, October 15, 2019

                                       சஷ்டியப்த பூர்த்தி  /  மணிவிழா

          ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 வது வயது ஆரம்பம் ஆகும் பொழுது அவர் பிறந்த நட்சத்திரதன்று மணிவிழா கொண்டாடுவது வழக்கம் .தஞ்சாவூர் பக்கம் திருக்கடையூர் சிவன் கோவிலில் வைத்து மணிவிழா கொண்டாடுவது  மிகவும் சிறப்பு . திருக்கடையூர் கோவில் விலாசம்
                              
                           அருள்மிகு அமிர்த கடைஸ்வரர் திருக்கோவில் ,
                            திருக்கடையூர் , நாகை மாவட்டம் ,
                           போன் நம்பர்  : - 04364 - 287429
சிறந்த குருக்களைய்யாவை நியமித்து இல்லத்தில் வைத்து அவரின் ஆலோசனைப்படி விமரிசையாக  நடத்திடலாம்  மிகவும் எளிமையாக அருகில் உள்ள சிவன் கோவிலிலும் வைத்து செய்யலாம். ஒரு மனிதரின் பிறந்த தினத்தன்று ஜாதகத்தில் கிரக அமைப்புகள் எப்படி இருந்ததோ அறுபது வருடம் கழிந்த பின்பும் மீண்டும் அதே கிரக நிலை 61 வது வருடம் அமைகின்றது . சஷ்டியப்த பூர்த்தி விழாவில் சிவலிங்கம் வடிவம் கொண்ட தாலியை திருமாங்கல்ய தாரனையாக செய்ய வேண்டும் மணிவிழா காணும் தம்பதியர் தங்களை விட வயது கூடியவர்களிடம்  ஆசிவாதம் பெறவேண்டும். அவர்கள் வயது குறைந்தவர்களுக்கு  ஆசி வழங்க வேண்டும்  ஆயுஸ்ஹோமம் செய்வது  சிறப்பு  ஹோமம் நடத்தி குடங்களில் புனித நீர் நிறைத்து மந்திரங்கள் சொல்லி முடிவில் அந்த குடங்களில் உள்ள நீரால் சஷ்டியப்த பூர்த்தி தம்பதியரை  அமரச் செய்து  அபிஷேகம் செய்வார்கள்  அபிஷேகம் முடிந்தபின் புத்தாடை அணிந்து  சிவலிங்க வடிவம் கொண்ட தாலியை திருமாங்கல்யமாக அணிவர் .. சஷ்டியப்த பூர்த்தி கண்ட தம்பதியருக்கு வீட்டு மாப்பிள்ளை பெளத்திர முடிச்சு மோதிரம் அணிவிப்பது வழக்கம் .. வயதில் சிறியவர்கள் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது  வெள்ளி / தங்கம் ஆகிய வற்றுள் பூக்கள் செய்து  தம்பதியரின் பாதத்தில் இட் டு வணக்குவர். சஷ்டியப்த பூர்த்தி விழாவை தம்பதியரின் மகன்கள் , மகள்கள் சேர்ந்து செய்வது வழக்கம் .

                                               சதாபிஷேக விழா

           ஒருவர் எண்பது  வயது நிறைந்து 81 வது வயது துவங்கும் பொழுது , ( 1001
பிறைகளை கண்டவர் ) நடத்தும் விழாவிற்கு சதாபிஷேக விழா என்று பெயர்.
சதாபிஷேக விழாவை சிறந்த குருக்களைய்யாவை கொண்டு செய்யலாம் .சிலர் அருகில் உள்ள ஆலயத்தில் வைத்தோ அல்லது திருக்கடையூர் கோவிலில் வைத்தோ நடந்தலாம் . ஆயுஸ்ஹோமம் நடத்தி , ஸ்ரீருத்ரஜபம்  செய்து தம்பதியருகு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் . சிவவடிவம் / குண்டுமனி கொண்ட தாலியை செய்து திருமாங்கல்ய தாரணை செய்ய வேண்டும் . சதாபிஷேகம் கண்ட தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்குவது மிகவும் சிறப்பு .ஆசீர்வாதம் வாங்கும் நபர்கள் வெள்ளி / தங்கம் ஆகியவற்றால்
செய்த பூக்களை தம்பதியரின் பாதத்தில் இடுவர் . மலர்களை தம்பதியரின் பாதத்தில் இட்டும் ஆசீர்வாதம் வாங்குவர் . சதாபிஷேகவிழாவை தம்பதியரின் மகன்கள் , மகள்கள் சேர்ந்து செய்வர்