Saturday, November 24, 2012

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல்

மணமக்கள் தம் தம் அறைக்குச் சென்று புத்தாடையுடுத்தி மணமகள் கலபரப்புச் செய்து மீண்டும் மணவறைக்குத் திரும்பும் முன்னர் குருக்கள் செய்து முடிக்கும் சடங்குகள் :

             திருமங்கல நாணை , பால் , புனித நீர் , சந்தனம் முதலான கொண்டு திருமுழுக்காட்டி , கற்பூர ஒளி காண்பித்து ஒரு தாம்பாளத்தில் தேங்காய் , வெற்றிலை , பழங்கள் , பாக்கு , பூமாலையுடன் வைத்து  , மண்டபத்தில் பெரியோர்களின் வாழ்த்துப் பெற்று வருமாறு அனுப்பிவைப்பார்கள்

அழல் ஓம்பல் ( ஹோமம் வளர்த்தல் ) : -

          அழற்குண்டத்தில் முறைப்படி அழல் உருவாக்குதல் : - குண்டத்தின் எட்டுப் பக்கங்களிலும் திக்குப் பாலகர் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து அங்கேயெல்லாம் வெற்றிலையில் மலர் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் .

ஒத வேண்டிய திருமுறைப்பாடல்கள் : -

அ ) வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிக நல்ல வீணை தடவி
        மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
        ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு      
                                                                                                                             முடனே  
         ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே .

ஆ ) நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
        ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
        கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத்திற மருளிக்
        கோளாய் நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே .      -  சம்பந்தர்
இ ) இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி
       அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி
       பெருநலமும் சுற்றமும் பெண்ணும் ஆணும் பிற உருவும் தம்முருவும்   
                                                                                                                  தாமேயாகி
      நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள்    
                                                                    நின்றவாறே  .          அப்பர்
                                                                                                                   
ஈ ) எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
       எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
       கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
       கொல்லும் கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி      
       கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
       கற்றார் இடும்பை களைவாய் போற்றி
       வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி
       வீரட்டங்காதல் விமலா போற்றி  .                          - அப்பர்

உ ) வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து
       இணங்கத் தன்சீரடியார் கூட்டமும் வைத்து , எம்பெருமான்
       அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
       குணங்கூரப் பாடி , நாம் பூவல்லி கொய்யாமோ .  -   வதவூரர் .

 ஊ ) ஒளிவளர் விள்க்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்தோர்                                                                                           
                                                                                                       உணர்வே
          தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும்  
                                                                                                                  தேனே
         அளிவளர் உள்ளத்து ஆனந்தக்கனியே அம்பலம் ஆடரங்காக
         வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா 
                                                                                              விளம்பே .   - திருவிசைப்பா 

எ ) குழலொலி , யாழொலி ,கூத்தொலி , ஏத்தொலி , எங்கும் குழாம் பெருகி
      விழவொலி விண்ணளவும் சென்று விம்மிமிகு திருவாரூரில்
      மழவிடையார்க்கு வழிவழியாளாய் மணம் செய்குடிப் பிறந்த 
      பழ அடியாரொடும் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே . 
                                                                                                திருபல்லாண்டு .

ஏ ) என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
       ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
       மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
       நின்றதெங்கும் நிலவி உலகெலாம் .               - சேக்கிழார்

                          மணமகன் புத்தாடையணிந்து அழைத்து வரப்பெற்று மேடையின் எதிர்புறம் மேற்கு நோக்கி நாற்காலியில் அமரவைக்க வேண்டும் .
                        மணப்பெண் புத்தாடையணிந்து அழைத்து வரப்பெற்று மேடையின் பின்புறம் கிழக்கு நோக்கி நாற்காலியில் அமரவைக்க வேண்டும் .
                      மேளம் வாசிப்பவருக்கு தேங்காய் , பழம் , வெற்றிலை , பாக்கு இவைகளுடன் சன்மானம் வைத்து ஊஞ்சல் பாட்டு வாசிக்கச் சொல்லவேண்டும் .

அ ) ஊஞ்சல் பாட்டு : -

      சீரார் பவளங்கால் , முந்தங் காயிறாக
      ஏராரும் பொற்பலகை ஏறி இனிது அமர்ந்து
      நாராயணன் அறியா நாண் மலர்த்தாள் நாயடியேற்கு
      ஊராகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
     ஆராவமுதின் அருட்தாள் இணைபாடி
     போரார் வேற்கண் மடவீர் பொன்னூசல் ஆடாமோ !        - வாதவூரர்

தெய்வத் தமிழ்த் திருமறைத் திருமண நூல்

தாய்மாமனுடன்  சடங்கு  : -

அ . அம்மையப்பர் : 

விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார்கழல் காட்டி நாயேனையாட் கொண்ட 
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்  - மணிவாசகர்

ஆ . காப்பணிதல் :

ஆர்வம் மிக்கெழும் அன்பினால் மலரயன் அனைய
சீர்மறைத் தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வழிபட்ட வரும் இரு வினைகளின் பந்தச்
சார் பொழிப்பவர் திருக்கையில் காப்பு நாண்  சாத்த .    - சேக்கிழார்

இ . முளைபாலிகை தெளித்தல் :

வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பிநின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனு மாம் பால்நிறமுமாம் பரஞ்சோதி தானாம்
தொத்தாம் அமரர் கணஞ்சூழ்ந்து போற்றத் தோன்றாது என் உள்ளத்தின் உள்ளெநின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே .    -  அப்பர் 

புத்தாடையளித்தல் : 

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டியென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே .                     -    வாதவூரர்

மணமகனுக்கு செய்தது போல் மணமகளுக்கும் காப்பு கட்டுதல் , முளைபாலிகை தெளித்தல் ஆகியவை முடிந்தபின் மணமகளுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள் .