Saturday, November 24, 2012

தெய்வத் தமிழ்த் திருமறைத் திருமண நூல்

தாய்மாமனுடன்  சடங்கு  : -

அ . அம்மையப்பர் : 

விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார்கழல் காட்டி நாயேனையாட் கொண்ட 
அண்ணாமலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்  - மணிவாசகர்

ஆ . காப்பணிதல் :

ஆர்வம் மிக்கெழும் அன்பினால் மலரயன் அனைய
சீர்மறைத் தொழிற் சடங்குசெய் திருந்துநூல் முனிவர்
பார்வழிபட்ட வரும் இரு வினைகளின் பந்தச்
சார் பொழிப்பவர் திருக்கையில் காப்பு நாண்  சாத்த .    - சேக்கிழார்

இ . முளைபாலிகை தெளித்தல் :

வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பிநின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்கனு மாம் பால்நிறமுமாம் பரஞ்சோதி தானாம்
தொத்தாம் அமரர் கணஞ்சூழ்ந்து போற்றத் தோன்றாது என் உள்ளத்தின் உள்ளெநின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே .    -  அப்பர் 

புத்தாடையளித்தல் : 

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டியென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே .                     -    வாதவூரர்

மணமகனுக்கு செய்தது போல் மணமகளுக்கும் காப்பு கட்டுதல் , முளைபாலிகை தெளித்தல் ஆகியவை முடிந்தபின் மணமகளுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள் .

No comments:

Post a Comment