Tuesday, October 23, 2012

தெய்வத்திருமுறைத் திருமண நூல் தொடர்ச்சி


               தெய்வத் திருமுறைத் திருமண நூல்
மணமகள் மணவறையில் தந்தையுடன் அமர்ந்து வழிபாடு : -
அ ) ஐந்தெழுத்து ஓதுவித்தல் : -
இருந்து சொல்லுவன் கேண்மிஙள் ஏழைகாள்
அருந்தவம்தரும் அஞ்செழுத்து ஓதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்தும் ஆகுவர் மன்னுமாற் பேறரே !    ( அப்பர் )
ஆ ) பிள்ளையார் வழிபாடு : -
மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெல்லாம் எளிதின் முற்றுற
கண்ணுத நுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவ்ன் மலரடி பணிந்து போற்றுவோம் ..
இ ) திருவிளக்கு வழிபாடு : -
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
 நல்லக விளக்கது நமச்சிவாயவே .    ( அப்பர் )
ஈ ) அம்மையப்பர் வழிபாடு : -
மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளை வெள்ளைமதி சூடியை
எனக்குத் தாயை எம்மான் இடைமருதனை
 நினைந்திட்டு ஊறி நிறைந்தது என்னுள்ளமே . ( அப்பர் )
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாள் தொறும் பரவ
பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணிதன்னோடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே .(சம்பந்தர் )
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண்ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைமேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட்டான்னே போற்றி போற்றி .    ( அப்பர் )

No comments:

Post a Comment