Wednesday, May 22, 2013

தெய்வத் தமிழ்த் திருமுறைத் திருமண நூல் - தொடர்ச்சி


          தெய்வத் தமிழித் திருமுறைத் திருமண நூல் - தொடர்ச்சி
ஆ. பெண் வலமாக வந்து மணமகனுக்கு மாலையணிவித்தலும் , மோதிரம் மாற்றிக் கொள்ளுதலும் : -
பூந்தார் நறுங்கொன்றை மாலை சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை ஏறிப்பல் பூதப்படை நடுவே
போந்தார் புற இசைபாடவும் ஆடவும் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவளோடு நெயந்தானத் திருந்தவனே .
14 ) தாரை வார்த்தல் : -மணமகள் ஊஞ்சல் பாட்டு முடிந்த்தும் மணமேடை சுற்றி மணமகன் அருகில் வந்து , மணமகனுக்கு மாலை அணிவித்து , மோதிரம் அணிவிக வேண்டும் . இந்த இட்த்தில் மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்க கூடாது .மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவிக்கவேண்டும் . இருவரும் மணமேடைக்கு வந்து அமரவேண்டும் .மாப்பிள்ளையின் பெற்றோர் மாப்பிள்ளையின் பக்கமும் , பெண்ணின் பெற்றோர் பெண்ணின் பக்கமும் நிற்க வேண்டும் .மாப்பிள்ளையின் பெற்றோர் கையின் மேல் மாப்பிள்லையின் கையைவைத்து , அதன் மேல் மணமகளின் கையை வைத்து , அதில் தேங்காய் , பழம் , வெற்றிலை பாக்கு வைத்து , மணமகளின் தந்தையும் , தாயாரும் சேர்ந்து தேங்காயின் மேல் பால் ஊற்றிக் கன்னிகாதானம் செய்ய வேண்டும் .
பெருகொளி ஞானமுண்ட பிள்ளையார் மலர்க்கதைதன்னில்
மருவு மங்கலநீர் வாசக்கரக முன்னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்திரத்தின் தங்குலம் செப்பி என்றன்
அருநிதிப் பாவையாரைப் பிள்ளையார்க் களித்தேன் .     ( சேக்கிழார் )
15  ) திருமங்கல நாண் அணிவித்தல் : - கன்னிகாதானம் செய்தபின் , அனைவரும் சிவன் நாமாவளி கூறவேண்டும் , கேட்டி மேளம் ஒலிக்க வேண்டும் .பின் திருமுறை
வாழ்த்து ஒதவேண்டும் .
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணிய நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே .     ( திருஞானசம்பந்தர் )
மணமகன் மணமகளுக்கு மங்கலநாண் அணிவித்தபின் , 3 முறை மாலை மாற்றி ,  பாலும் பழமும் கொடுத்து , இருவரும் இடம் மாறி , மணப்பெண் மாப்பிள்ளையின் இடப்பாகம் அமரவேண்டும் .
திருமுறை : -
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை
மணியினைப் பணிவார் வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும்
விமலனை அடியேற்கு எளிவந்த
தூதனைத் தன்னைத் தோழமையருளித்
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை  நள்ளாறனை அமுதை நாயினேன்
மறந்து என் நினைக்கேனே .
ஆ ) ஏற்றி இறக்கி கண்ணேறு கழித்துப் பொரியிடல் : -
மாப்பிள்ளையின் சகோதரி மணமக்களுக்கு ஏற்றி இறக்கி கண்ணேறு கழிப்பதற்காக
அடைபொரியினை கையில் எடுத்து மணமக்களை சுற்றி நான்கு திசைகளிலும்
போடவேண்டும் . அதன்வகைக்கு பாடவேண்டிய பாடல்
 1 ) பொள்ளலாக்கை அகத்திலைம் பூதங்கள்
கள்ளமாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ளலாக்கி விசயமங்கைப் பிரான்
உள்ளம் நோக்கி என்னுள்ளுள் உறையுமே . ( அப்பர் )
 2 ) விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளங்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே .
3 ) வேட்டவியுண்ணும் விரிசடை ந்ந்திக்குக்
காட்டவும் நாமிலங் காலையும் மாலையும்
ஊட்ட வியாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவியாமே .         ( திருமூலர் )
மணமக்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும் .
மணமகன் எடுக்க வேண்டிய உறுதி மொழி : -
சிவத்திரு -----------( மாப்பிள்ளையின் தந்தை பெயர் )
சிவத்திரு -----------( மாப்பிள்ளையின் தாயார் பெயர் )
ஆகியோரின் மகனான ----------( மணமகன் பெயர்  )
ஆகிய நான் , ஆதியும் அந்தமும் இல்லாஎம் மிறை சிவபெருமான் திருவருளால்
இன்று ------தேதி--------கிழமை  சிவத்திரு ---------( மணமகள் தந்தை பெயர் )
சிவத்திரு --------( மணமகள் தாயார் பெயர் )  ஆகியோரின் மகளான செல்வி --------( மணமகள் பெயர் ) யை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டுள்ளேன் எனவும் , தெய்வப்பலவர் திருக்குறள் நெறி நின்று இருவரும் இணைந்து இல்லறம் ஆகிய நல்லறத்தை இனிது நடத்துவோம் என்று உறுதி கூறுகிறேன் .
மணமகள் எடுக்க்க வேண்டிய உறுதிமொழி : -
      எம்மிறை சிவபெருமான் திருவருளுடன் இன்று என்னைத் தமது இல்லத் துணைவியாக ஏற்றுக் கொண்டுள்ள திருமிகு ------( மணமகன் பெயர் ) ஆகிய என் கணவருடன் திருக்குறள் நெறியில் இனிய இல்லறம் நட்த்திட இவருடன் என்றும் துணையாயிருப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .
மணமக்கள் உறுதி மொழி எடுத்தபின் , அவர்களுக்கு திருமணத்திற்கு வந்து உள்ள பெரியவர்கள் திருநீறு பூசி ஆசிர்வதிக்க வேண்டும் .
ஆசிர்வதிக்கும்போது பாடவேண்டிய பாடல்கள் : -
1 ) ஆறுலவு செய்ய சடை அய்யர் அருளாலே
    பேறுலகினுக்கு எனவரும் பெரியவர்க்கு
    வேறு பல காப்பு மிகை என்றவை விரும்பார்
    திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைத்தார் .
2 ) ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
    தானங் காட்டுவர் த்ம்மடைந்தார்க் கெல்லாம்
    தானங் காட்டித்தன் தாளடைந்தார்க்கட்கு
    வானம் காட்டுவர் போல் வன்னியூரறே .        ( அப்பர் )
3 ) ஆனந்தவெள்ளத் தழுந்தும் ஒர் ஆருயிர் ஈருருக்கொண்டு
    ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தால் ஒக்கும் அம்பலஞ்சேர்
    ஆனந்த வெள்ளத்தறை கழலோன் அருள் பெற்றவரின்
    ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இவ்வணி நலமே .  ( திருக்கோவையார் )
4 ) துதி வாணிவீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
    அதி தானியம் செளபாக்யம் போகம் அறிவு அழகு
    புதிதாம் பெருமை அறம் குலம் நோயின்மை பூண்வயது
    பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே .
மணமக்களை பெரியவர்கள் ஆசிர்வதித்தபின் மணமக்களின் வலக்கைச் சுண்டு விரல்களை இணைத்து , பட்டுத் துணி கொண்டு கட்டவேண்டும் .மணமக்கள் மணமேடையை 3 முறை சுற்றி வரவேண்டும் . அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரத்தை பார்க்கவேண்டும் . சுண்டு விரல் இணைக்கும் பொழுது பாட வேண்டிய பாடல் : -
 சாற்றும் நான்மறைகள் ஆர்ப்பத்தூரியம் சங்கம் ஓங்கக்
  கற்ற நான்முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்த ஆற்றால்
  முற்ற மங்கல நாண்சாத்தி முழுதுலகீன்றாள் செங்கை
  பற்றின்ன் பற்றிலார்க்கே வீடருள் பரமயோகி .       ( பரஞ்சோதி முனிவர் )
மணமக்கள் மணவறையை வலம் வரும்பொழுது பாட வேண்டிய பாடல் : -
மாதர்பிறைக் கண்ணியனை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ்சுவடு படாமல் அய்யாறடை கின்றபோது
காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் .
மணமக்கள் அம்மி மிதித்து அருந்த்தி நட்சத்திரம் பார்க்கும் போது பாடும் பாடல் : -
மங்கலம் மிகுந்த செம்பொன் அம்மிமேல் மணாட்டிபாத
பங்கய மலரைக் கையால் பரிபுரம் சிலம்பப் பற்றிப்
புங்கவன் மனுவால் ஏற்றிப் புண்ணிய வசிட்டன்தேவி
எங்கெனச் செங்கை கூப்பி எதிவர அருட்கண் சாத்தி .
வாழ்த்துப்பாடல் : -
1 ) வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
   வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
   ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
   சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
2 ) வையம் நீடுக மாமழை மன்னுக
    மெய் விரும்பிய அன்பர் விளங்குக
    சைவ நன்னெறிதான் தழைத்தோங்குக
    தெய்வ வெண்ணீறு சிறக்கவே .
3 ) ஆறிரு தடந்தோள் வாழ்க ! அறுமுகம் வாழ்க ! வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க ! குக்கடம் வாழ்க ! செவ்வேள்
    ஏறிய மஞ்ஞை வாழ்க ! யானைதன் அணங்கு வாழ்க !
    மாறிலா வள்ளி வாழ்க ! வாழ்க சீர் அடியாரெல்லாம் !
பின்னர் மணமகனின் அறைக்கு இருவரும் அழைத்து வரப்பெற்று கைக்கட்டவிழ்த்து,
பால் , பழம் மணமக்களுக்கு கொடுக்க வேண்டும் .  

No comments:

Post a Comment